skip to main | skip to sidebar

Pages

  • முகப்பு

காதலுக்கு......

கட்டி வைத்த என் கனவுலகத்துக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன்...........

சனி, 29 ஆகஸ்ட், 2009

01.விடை தேடுகின்றேன்...........




சில நாள் பழகியிருந்தாலும் பிடித்திருக்கிறதா என்று கேட்க
உன்னுள் புதைந்தே பல நாள் ஆகிவிட்டது என்று பதில் கூற
மறுத்தது பெண்மை

என் கண்கள் திறந்திருந்தாலும் மூடிக்கொண்டாலும் நீ
தெரிவாய் என்பதை மறந்து இமைகளால் பூட்டிக்கொண்டேன்
உன்னை உள்ளே வைத்து

என் நிலை புரியாமல் பார்க்கமாட்டாயா என்கிறாய் பாசமாக
என் விழிபேசும் மொழி விளங்கிவிடுமோ என்றப‌யம் ஒருபுறம்
உத்தரவின்றி பத்திரப்படுத்தியிருக்கும் என்
விழிச்சிறையிலிருந்து விடுதலை பெற்றுவிடுவாயொ என்ற
ஏக்கம் மறுபுறம் .........

இதற்கிடையில் நீதான் பார்க்க மாட்டாய் நானாவது
பார்த்துவிட்டு மடிகிறேன் என்று பொங்கி வந்த என்
கண்ணீரை, எப்போது கை தருவான் என்று பார்த்திருந்த
என் கரங்கள் "என்னை தொடமுன் உன்னை துடைக்க
விட்டுவிடுவேனா என்று வீறாப்பாய் துடைத்தெறிந்தது

எல்லாமே தமக்குள் போர் செய்தலும்
என் நிலையை நாவாவது எடுத்துச் சொல்லும்
என்றிருந்தேன். ஏமாற்றியது அதுவும்.
எந்த வார்த்தையும் வரவில்ல உன் பெயரை தவிர

நான் உன் பெயரை சொல்ல என் தந்தை
என் பெயரை சொல்ல சரியாக இருந்தது.

நிழலாய் எனை நீ தொடர்வாய் இரவும் பகலும் என
நானும் நகர்த்த முயன்றேன் வேர் விட்ட என் கால்களை

காதலித்தவர்களே.........
காதலிப்பவர்களே..........
இதுதான் காதலா............
Posted by விமலரூபன் at 12:43 AM இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: 01.விடை தேடுகின்றேன்...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

இலங்கை நேரம்

Blogger இயக்குவது.

இதுவரை செதுக்கியவை

  • 01.நிலா முற்றம்.... (1)
  • 01.விடை தேடுகின்றேன்........... (1)
  • 02.என் காதலனுக்கு மட்டும்...... (1)
  • 03.இன்னுமா புரியவில்லை???????? (1)
  • 04.வரைந்தது கவிதை அல்ல உன் முகம் என்னும் ஓவியம் (1)
  • 05.முதற்பார்வை........................ (1)
  • 06.மலர் அர்ச்சனை (1)
  • 07.உன் கூட்டில் (1)
  • 08.நினைவுகளால் வாழ்கின்றேன்... (1)
  • 09.என்னுள் நீ (1)
  • 10.காதல் உலகில் இது விசித்திர வழக்கமா...... (1)
  • 11.செல்லிட தொலைபேசி (1)
  • 12.காலையில் வந்த அழைப்பு... (1)
  • 13.பார்த்ததும் பிடித்தது (1)
  • இதுவும் கதலா..... (1)
  • உனை மறக்க வேண்டாம் என்று (1)
  • என் அன்பானவழுக்கு... (1)
  • என் பயணத்தில்...................... (1)
  • காத‌லிக்கும் ச‌கோத‌ர‌னாக‌........... (1)
  • சிரிக்கலாம் வாங்க...( (1)
  • சின்ன‌தாய் சில‌ ஆசைக‌ள் (1)
  • சொந்த மண்ணை தொட்ட போது..... (1)
  • நீ வருவாயா...... (1)
  • நீ வருவாயென‌ (1)
  • புரியவில்லையா இன்னும் உனக்கு... (1)
  • மொழி பேசும் விழிகள் (1)
  • வாழவிடு இல்லை சாக விடு...... (1)
  • விடை கூறு (1)
  • RING TONE (1)

உருவாக்கம்

எனது படம்
விமலரூபன்
செட்டிபாளையம்,, மட்டக்களப்பு
கவிதையை செதுக்க சிற்பியாக இல்லையேனும் ஒரு சிறிய உளியாக..
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இன்றைய படம்

இன்றைய படம்
மடு தேவாலயம்,மன்னார்,இலங்கை

Online Users

 
(c) Copyright 2010 காதலுக்கு....... Designed by Blogspot Templates
Supported by Video Game Music, Website Hosting, VPS Hosting